வரும் 2021 தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில்தான் தன்னுடைய எதிர்கால வெற்றியும் இருக்கிறது என்பதால் பிரசாந்த் கிஷோர் கடுமையாக உழைத்து வருகிறார்.
முதன்முறையாக உடன்பிறப்புகளுக்கு தரிசனம் தந்த பிரசாந்த் கிஷோர்..! கூப்பிட்டு வந்த மாப்பிள்ளை.
அவர்தான் தேர்தல் வியூகம் வகுக்கிறார் என்பது உடன்பிறப்புகளுக்குத் தெரியாலும், அவர் யார் என்பதை பார்க்கவும், அவர் பேசுவதைக் கேட்கவும் முடியாத நிலையே இருந்தது. இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகன் மரணத்துக்கு சகல கட்சிகளிலும் இருந்து பல்வேறு வி.ஐ.பிகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் பிரசாந்த் கிஷோரும் வந்து கலந்து கொண்டார்.
பிரசாந்த் கிஷோரை யார் இயக்குவது என்பது பலருக்கும் சந்தேகமாக இருந்தது. ஏனென்றால், ஆரம்பத்தில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கட்டுபாட்டில் பிரசாந்த் கிஷோர் இருந்ததாகவும், இப்போது முழுக்க முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்கு வந்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், அது உண்மை இல்லை என்பதை உறுதிப்படுத்துவது போல், இப்போது பிரசாந்த் கிஷோரை அழைத்துவந்தது, மாப்பிள்ளை சபரீசன்தான். ஆக, கட்சி இப்போது மாப்பிள்ளை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுதான் உண்மை. பேசாம, அவருக்கும் ஒரு பதவியை கொடுங்கப்பா.