அன்று மோடி! இன்று கமல்! உலக நாயகனை முதலமைச்சராக களம் இறங்கி ஐபேக் டீம்! எடப்பாடி குரூப் அப்ஷெட்!

நான்தான் மோடியை ஜெயிக்க வைச்சேன், நான்தான் ஜெகன்மோகனை ஜெயிக்க வைச்சேன் என்று பேசிக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரியவ்ந்துள்ளன.


எடப்பாடி டீம் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமை, எப்படியும் அ.தி.மு.க.வுக்கு பணியாற்ற வைப்பதில் ஆர்வமாக இருந்தது. ஆனால், இரண்டு பேர் தலைமை வகிக்கும் கட்சிக்கு தன்னால் பணியாற்ற முடியாது என்று பிரசாந்த் பின்வாங்கி விட்டாராம். அதனால், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தை வளரவைத்து, கமல்ஹாசனை முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதற்காக களத்தில் குதித்துவிட்டது ஐபேக் டீம்.

இதற்காக 150 பேரை வேலைக்கு அமர்த்தி, கட்சி குறித்து ஆதி, முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து வருகிறார்களாம். இதற்காக பிரசாந்த் கிஷோருக்கு பல கோடி ரூபாய்கள் கொடுக்கவேண்டிய நிலை இருக்கிறது. இதை எப்படி கமல்ஹாசன் கொடுப்பார் என்பதற்குப் பின்னேதான் தேசிய அரசியல் இருக்கிறது என்கிறார்கள். பா.ஜ.க.வின் பி டீம்தான் மக்கள் நீதி மய்யம் என்பது உண்மையோ என்று நம்ப வேண்டியிருக்கிறது. 

அரசியல் மக்களுக்கான சேவை என்பது மாறி பெறும் பணம் வைத்திருக்கும் கம்பெனிகளின் தொழிலாக மாறி நிற்கிறது என்பதுதான் வேதனை. கமல்ஹாசனை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கவேண்டும் என்பதை பிரசாந்த் கிஷோரிடம் யாராவது அழுத்திச் சொல்லிவிடுவது நல்லது. ஏனென்றால், அவர் ஷங்கரிடம் பேசி, முதல்வன் படத்தில் நடிப்பதற்கு ஏற்பாடு செய்துவிடப் போகிறார்.

இதற்கு முன்னதாக மோடிக்கு வேலை பார்த்தவர் இந்த பிரசாந்த் கிஷோர். மோடி பிரதமராக இவரது டீம் வொர்க் பேருதவி செய்தது. பின்னர் மோடிக்கு எதிராக நிதிஷ்குமாருடன் கரம் கோர்த்து நிதிஷை முதலமைச்சராக்கியவரும் இவர் தான். தற்போது மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கும் பிரசாந்த் தான் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.