பிரானிக் ஹீலிங்!நோயாளிகளை தொடாமலே வெறும் கையில் நோயை விரட்டும் முறை!

நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்கிரட்டீஸ் கூட நம்முடைய உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி படைத்தது என்று கூறியுள்ளார். உடலில் நோயால் பாதிப்படைந்துள்ள பகுதிக்குப் பிராண சக்தியை அளித்தால் போதும். விரைந்து குணமாகிவிடலாம்.


உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ரிஷிகள் பிராண சக்தியை நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தினார்கள். பண்டைய முறையின் அடிப்படை, இன்றைய மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றி வடிவமைக்கப்பட்டது பிரானிக் ஹீலிங் (Pranic Healing) என்ற இந்தப் புதிய சிகிச்சை முறை. டாக்டர்கள் கைவிட்ட நோயாளிகளையும் பிரானிக் ஹீலிங் முறையில் எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

நம் உடலைச் சுற்றி ஐந்து அங்குலம் வரை ஆரா (Aura) எனப்படும் ஒளி வட்டம் காணப்படுகிறது. இது ஆரோக்கியக் கவசமாக இருந்து நம் உடலில் நோய் தோன்றுவதற்கு மூன்று மாதம் முன்பே இந்த ஒளி வட்டக்கவசம் பாதிக்கப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானி கிரிலான் என்பவர் இந்த ஒளி வட்டத்தைப் படமாகக்கூட எடுத்துக்காட்டியுள்ளார்.எனவே, நோயாளியைத் தொடாமலேயே பிரானிக் ஹீலர் இந்த ஒளி வட்டத்திற்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவார்.

மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், புற்று நோய், மனக்கோளாறு, மூச்சுக் கோளாறுகள் முதலியவற்றைச் சிரமமின்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். நாட்பட்ட நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொள்பவர் பிரானிக் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஐந்து மடங்கு வேகத்தில் விரைந்து குணமாவார்.