தமிழக தொழிலாளர்களை விரட்டி அடித்த பினரயி அரசு! வெளி மாநிலத்தவரை தங்க வைத்து சோறு போடும் எடப்பாடி அரசு! கொரோனா ஹீரோ!

மூன்று நாட்களுக்கு முன்பு இந்திய ரயில்வே ரயில் சேவையை நிறுத்தியபோது சென்னை சென்ரல் ரயில் நிலைய வாசலில் , எங்கும் போக வழியில்லாமல் நின்ற இரண்டாயிரம் வட இந்திய கூலி தொழிலாளர்களை மண்டபங்களில் தங்கவைத்து தற்போதுவரை உணவளித்து வருகிறது தமிழக அரசு.


ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் தங்கியிருக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்களும் இந்த மாதம் ரேஷனில் அரிசி, பருப்பு பெற்று தங்கள் பசியை போக்கிக்கொள்ளலாம் என மனிதாபிமானத்தோடு அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஆனால் கேரளா செய்வது என்ன? இதுதான் பினராயி விஜயனின் உண்மை குணம். மூன்று நாட்களுக்கு முன்னோக்கிப்போய் ஒரு செய்தியை தேடிப்பாருங்கள். 'கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் திருவனந்தபுரம் வந்திறங்கிய 6 தமிழர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்துதமிழக எல்லையில் விட்டது கேரள அரசு' என்ற செய்திதான் அது.

இது அக்கிரம் மட்டும் அல்ல கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாத பச்சை அயோக்கியத்தனம். முதலில் பாதிக்கப்பட்ட யார் தங்கள் மண்ணில் இருந்தாலும் அவர்களை காப்பாற்ற வேண்டிய அந்த அரசின் தலையாய கடமை. அடுத்து இது போன்ற தொற்று நோய்களை பரப்பும் வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை முழுமையாக குணப்படுத்தாமல் மற்ற ஊருக்கு அனுப்புவதால் அங்குள்ள அப்பாவி மக்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என நினைக்கும் சமூக சிந்தனை. 

இந்த இரண்டுமே பினராயி கும்பலிடம் இல்லை. ஒருவேளை கோவை விமான நிலையத்திற்கு கேரளாவை சேர்ந்த 4-5 பேர் அரபு நாடுகளிலிருந்து வந்திறங்கி, அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக சிகிச்சை அளிக்குமா அல்லது கேரளாவில் கொரோனா வைரஸ் பரவினால் பரவாயில்லை நம் ஊரில் பரவாமல் இருந்தால் போதும் என நினைத்து கமுக்கமாக அவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டுபோய் கேரளா எல்லையில் விட்டுவிட்டு வந்துவிடுமா? 

நிச்சயம் செய்யாது. ஆனால் கேரளா அதை செய்யும். இதை கண்டும் காணாமலும் இங்குள்ள பினராயி விஜயனின் ரசிக குஞ்சுகள் பொத்திக்கொண்டிருக்கும்.

நன்றி: நம்பிக்கை ராஜ்