பி.ஜே.பி தலைவர்களை சூனியம் வைத்து கொல்லும் காங்கிரஸ்! பிரக்யா தாகூர் அதிர்ச்சி தகவல்!

பிரக்யா சிங் தாகூர் வாயைத்திறந்தாலே வம்புதான்.காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்த்தன் என்று சொல்லி மோடியையே அலரவைத்தவர் அம்மனி.


மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தடுக்கும் போராட்டத்தில் கொல்லப்பட்ட மகாராஷ்ட்ரா அதிரடிப்படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே செத்தது என் சாபத்தால்தான் என்று சொல்லி கடும் கண்டனத்துக்கு ஆளானவர் என்று பிரக்யாவின் பிரக்யாதியை சொல்லிக்கொண்டே போகலாம்.அவரது லேட்டஸ்ட் அதிரடி காங்கிரஸ் பில்லி சூனியம் வைத்து பிஜேபி தலைவர்களை கொல்கிது என்கிற குற்றச்சாட்டு!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வர் பாபுலால் கெளர் கடந்த 20ம் தேதி மரணமடைந்தார்.அவரருக்கும்,மறைந்த முன்னாள் முதல்வர் அருன் ஜெட்லி ஆகியோருக்கு நடந்த அஞ்சலில் கூட்டத்தில்தான் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார் பிரக்யா.

தான் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஒரு துறவையச் சந்தித்ததாகவும்,அவர்தான் பிஜேபியை தேர்தல் களத்தில் வெல்ல முடியாய எதிர் கட்சிகள் சில மாரக (அழிக்கும்) சக்திகளை பயன்படுத்தலாம் என்று அவர் தன்னை எச்சரித்ததாகவும் சொன்னார் பிரக்யா.

'இப்போது வரிசையாக சுஷ்மா ஸ்வராஜ்,அருன் ஜெட்லி,பாபுலால் கெளர் என்று நமது தலைவர்கள் ஒவ்வொருவராக மரணமடைவதைப் பார்க்கும் போது அந்த துறவி சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது' என்று பேசி இருக்கிறார்.

இதுபற்றி மேற்கொண்டு விபரங்கள் அறிவதற்காக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரக்யா சிங் தாகூர் பதிலலிக்க மறுத்துவிட்டார்.இந்த செய்தியை அடுத்து எரிச்சலடைந்த மத்தியபிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஜா,பிரக்யாவுக்கு மனநிலை சரியில்லை.

அவருக்கு விரைவில் சிகிச்சை அளிப்பது நல்லது.அதுவரை அவர் வைத்திருக்க வேண்டிய இடம் மனநல காப்பகம் என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.