சென்னையில் இன்று 8 மணி நேரம் மின்வெட்டு! எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா?

சென்னை: ஆகஸ்ட் 21 (புதன்கிழமை) அன்று, அடையாறு, ஆவடி பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறியுள்ளதாவது:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 21 அன்று காலை 9 மணி தொடங்கி, மாலை 5 மணி வரை அடையாறு, திருவான்மியூர், ஆவடி, பொன்னேரி, ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர், தரமணி, நீலாங்கரை, பாலவாக்கம்,  உள்ளிட்ட வட்டங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

மாலை 5 மணிக்குள் இந்த பகுதிகளில் பராமரிப்புப் பணி முடிவடைந்துவிட்டால், உடனடியாக, மின் இணைப்பு தரப்படும். பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகள் செய்து வைத்துக் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.