பள்ளிவாசலில் பிரேதப் பரிசோதனை! பஸ்டாண்டில் தொழுகை! நெகிழ வைத்த கேரள இஸ்லாமியர்!

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் மலப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.


இதில் கவளப்பாற பகுதியில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் 59 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.அங்கிருந்து இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.ஆனால் அந்த உடல்கள் மிகவும் உருக்குலைந்து காணப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது இயலாதென்பதால், அவற்றை அருகிலேயே வைத்து உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அந்தப் பணிக்கு அருகில் இருந்த மஸ்ஜித்துல் முஜாகிதீன் பள்ளிவாசலைப் பயண்படுத்திக் கொள்ள அதன் நிர்வாகிகள் அனுமதித்தனர்.அருகில் உள்ள அரபி பாடசாலையில் இருக்கும் மேஜை ,பெஞ்ச் போன்றவற்றில் வைத்து பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டது.பள்ளிவாசலின் மற்றொரு பகுதியில் தொழுகை நடந்தது.

வெள்ளியன்று சிறப்புத் தொழுகைக்கு அதிகம் பேர் வருவார்கள் என்பதால் அதற்கு அருகிலுள்ள போத்துக்கல் பேருந்து நிலையத்தில் வைத்து தொழுகை நடத்தப்பட்டது.இந்த தொழுகையில் நிலம்பூர் தொகுதி எம்.எல்.எ அனவரும் கலந்து கொண்டார்.