அயோத்தி தீர்ப்பு! ஐந்து ஏக்கர் என்று பிச்சை போடுகிறீர்களா? கொதிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா!

அயோத்தியில் பாபர் மசூதிக்காகவே முஸ்லீம்கள் போரடினார்களே தவிர நிலத்திற்காக அல்ல என்றும் ஐந்து ஏக்கர் நிலம் முஸ்லீம்களுக்கு என்று பிச்சையா போடுகிறிர்கள் என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொந்தளித்துள்ளது.


சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் பேசியதாவது. இன்று நாடே எதிர்பார்த்த நூற்றாண்டு காலமாக நடத்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது , இது ஏமாற்றத்தை அளித்துள்ளது, பாபர் மசூதி வழக்கு ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்வை திருப்பிபோட்டது. திருட்டுத்தனமாக ராமர் சிலையை பாபர் மசூதி வளாகத்தில் வைத்த பின்னர் தான் பிரச்சனை ஏற்பட்டது

1949பிறகு இந்திய வரலாற்றில் பாபர் மசூதியை குறித்து எழுதாமல் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு முக்கியத்துவமானது, இது முன்னுக்கு பின் முரணான தீர்ப்பு. ராமர் சிலையை வைத்தது தவறு என்று சொல்கிறார், மசூதி இடிக்கப்பட்டது தவறு என்கிறார் , அங்கு எந்த கோவிலும் இடித்து மசூதி கட்டப்படவில்லை என்கிறார்கள் ஆனால் குற்றம் இழைத்தவர்களுக்கு 2.77ஏக்கர் இடத்தை ஒப்படைத்து விட்டார்கள்.

ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பு இருக்க வேண்டும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடாது, தீர்ப்பை யார் எழுதினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதை யார் உறுதி செய்தார் என்பது கேள்விக்குறியாக உள்ளது ,

தீர்ப்பின் பின் இணைப்பையும் யார் எழுதினார் என்பதை குறிப்பிடவில்லை. இதில் எல்லாம் சந்தேகம் உள்ளது. 5ஏக்கர் நிலத்தை தருகிறோம் என்று பிச்சை போட்டது போல் கூறியுள்ளார்கள். நிலத்திற்கான பிரச்சனை அல்ல நியாத்திற்கானது. இதனால் பலர் ஊனமாக்கப்பட்டுவிட்டார்கள்.

சொத்துகளை இழந்துள்ளார்கள். தீவிரவாதி பட்டம் கட்டப்பட்டு விட்டார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இது இஸ்லாம் சமூகத்திற்கு அவ நம்பிக்கையை அளித்துள்ளது.