வறுமை! தீராத நோய்! கண்டுகொள்ளாத கணவன்! 4 குழந்தைகளுக்கு அரளிவிதை சோறு போட்ட அம்சவேணி! கோவையை உலுக்கிய சம்பவம்!

வறுமை காரணமாகவும், குழந்தையின் சிகிச்சை பணம் இல்லாத காரணத்தாலும் 4 குழந்தைகளுக்கு தாய் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


கோவை பீளமேடு பகுதியில் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ், மனைவி அம்சவேணி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் 4 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டபட்டு வந்துள்ளார் அம்சவேணி. இதற்கிடையே 2வது குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கணவரும் பணிநிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிட நுரையீரல் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 4 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை. மருத்துவ செலவுக்கு பணமும் இல்லாத காரணத்தால் மனமுடைந்த அம்சவேணி அனைவரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.  

இதையடுத்து நேற்று இரவு அரளி விதையை அரைத்து தனது குழந்தைகளுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்தார் அம்சவேணி. பின்னர் தானும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டார். குழந்தைகள் சாப்பிடும்போது "ஏம்மா சாப்பாடு கசக்குது" என கேட்க அம்சவேணி துக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் மனம் திருந்தி உடனே அனைவரையும் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று நடந்ததை சொன்னார்.

இதையடுத்து  5 பேருக்கும் மருத்தவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.