பொங்கலுக்கு ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கிய பைக்..! ரேஸ் சென்ற இளவரசன் பரலோகம் சென்ற பரிதாபம்! நாகை அதிர்ச்சி!

பொங்களுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கே என் புள்ள உயிரை பறிச்சிடுச்சே கதறிய பெற்றோர்.


நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன் பைக் மீது அதிக ஆர்வம் கொண்டவரும் கூட, வேகமாக பைக் ஓடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த பொங்கல் அன்று அவர் வீட்டில் அடம் பிடித்து சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கியுள்ளார்.  இதற்கிடையில் புதிதாக வாங்கிய பைக்கில் நண்பர் உதயகுமாரை அழைத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்

இளவரசன். இந்த நிலையில் தான் வேகமாக வந்த பைக்கில் எதிரில் வந்த கார் மோதியதில் இளவரசன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர்.

சிகிச்சை பலனின்றி இளவரசன் பரிதாபமாக உயிரழந்தார். நண்பர் உதயக்குமாருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.