சுபாஷினி டீச்சரை கட்டிப்பிடிக்கலாம்! டான்ஸ் ஆடலாம்! குதூகலிக்கும் மாணவர்கள்! ஏன் தெரியுமா?

புதுச்சேரி நோனாங்குப்பத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் சுபாஷினி டீச்சர்,


குழந்தைகள் மீது அதீத அன்புப்கொண்ட சுபாஷினி அவர்கள் படிப்பின் மீது ஆர்வத்துடன் இருக்க பிரத்யேக வழிமுறைகள் கையாண்டு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்கிறார். பொதுவாக வகுப்பறைக்குள் நுழையும் பிள்ளைகள் அழுது அடம் பிடிப்பது சகஜம் தான்.

ஆனால் சுபாஷினி டீச்சர் வகுப்பு பிள்ளைகள் மட்டும் ஆட்டம் பாட்டம் என குதூகலத்துடன் வகுப்புக்கு செல்லும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாகவுள்ளது. அதற்காக பாடமே நடத்தபடவில்லை என்பது அல்ல, க் - க் = கொக்கு, ங் - ங் = சங்கு என்று பாடத்தை பாடலாக  தொடங்குகிறார்  மாணவர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும் லயித்து படிக்க ஆரம்பித்தார்கள்.

வெறும் படிப்பு மட்டுமல்லாமல், அவர்களது திறமைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு சுபாஷினி பல முயற்சிகளை மேற்க்கொள்கிறார். அதற்க்கான சான்று தான் காலையில் வகுப்பு தொடங்குவதே  'குட் மார்னிங்' என்று ஆசிரியர்களுக்கு ஒரு வணக்கத்தை வழக்கமாக வைக்காமல், வகுப்புக்குள் நுழையும் போதே அங்கு ஒரு நோட்டீஸ் போர்ட்டில், சில படங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது.

அதில் கட்டிப்பிடித்தல், நடனம் ஆடுதல் போன்று வரையப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் உள்ளே நுழைந்து தங்கள் விருப்ப சாய்ஸ் எது என்று அந்த போர்டில் கை வைத்து சொல்கிறார்கள். நடனம் என்பதை தொட்டவுடன், அந்த குழந்தையுடன் சேர்ந்து சுபாஷினியும் ஒரு சின்ன ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடி பிள்ளைகளை வரவேற்கிறார்.

கட்டிப்பிடித்தல் என்ற ஆப்ஷனை தொட்டால், பிள்ளைகளை இறுக்கமாக பாசத்துடன் கட்டிப்பிடித்து வரவேற்கிறார். பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை சலிக்காமல், செய்கிறார்.எத்தனை பிஞ்சுகள் வரிசையில் நின்றிருந்தாலும், எல்லோரது ஆசையையும் நிறைவேற்றி, குஷிப்படுத்திவிட்டுத்தான் பாடத்தையே ஆரம்பிக்கிறார். அதனால்தான் சுபாஷினி டீச்சர் வகுப்பறையில் எப்பவுமே சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது!

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பிற ஆசிரியர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.