தொழில் அதிபருக்கு மனைவியை விருந்தாக்கிய மசாஜ் செண்டர் ஓனர்! வீடியோவும் எடுத்து வைத்து அரங்கேற்றிய பகீர் சம்பவம்! புதுச்சேரி திகுதிகு!

புதுச்சேரி: தொழிலதிபரை மிரட்டி ஆபாச படம் எடுத்து பணம் பறித்த மசாஜ் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.


புதுச்சேரியில் உள்ள திருமுடி சேதுராமன் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். 63 வயதான இவர் தொழிலதிபர் ஆவார். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு அவருக்கு இளம்பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு, பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதனை அந்த பெண்ணின் கணவர் உதயகுமார் என்பவர் வீடியோவாக எடுத்துள்ளார். பிறகு, மஞ்சுநாத்திடம் நெருங்கிப் பழகிய உதயகுமார், சில நாட்கள் முன்பாக, முதலியார்பேட்டையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளதாகவும், அங்கு வந்தால் இளம் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதனை நம்பி தள்ளாடும் வயதிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிளம்பிச் சென்ற மஞ்சுநாத்தை, தனியார் வீடு ஒன்றுக்கு, உதயகுமார் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மஞ்சுநாத்திடம் நெருங்கி பழகிய பியூட்டி பார்லர் பெண் மற்றும் ஒரு ஆண் இருந்துள்ளனர். அவர்களுடன் உதயகுமாரும் சேர்ந்துகொண்டு, மஞ்சுநாத் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி, அவரை அடித்து உதைத்துள்ளனர். மஞ்சுநாத்தின் செல்போனை மிரட்டி வாங்கிய உதயகுமார், அதில் இருந்து ஆப் மூலமாக, தனது வங்கிக் கணக்கிற்கு, ரூ.5 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்துகொண்டார்.

இதுபற்றி மஞ்சுநாத் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், உதயகுமார், அவரது மனைவி பிரேமா மற்றும் நண்பர் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். சேலத்தில் தலைமறைவாக இருந்த அவர்களிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். சொந்த மனைவியையே பணத்திற்காக, மற்றொரு ஆண்கூட பழக விட்டு, படம் எடுத்து மிரட்டிய அந்த 'உன்னத' கணவரை தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.