எங்கள் உடம்பு தான் வேண்டுமா? வெளிப்படையாக சொல்லுங்கள்! அழ வைக்காதீர்கள்! பொன் விமலாவின் அட்வைஸ்!

சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் பெண்களுடன் பழகும் ஆண்கள் ஒரு கட்டத்தில் அந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அதனால் ஏற்படும் சங்கடங்களையும், அதற்கான வழியையும் பிரபல ஊடகவியலாளர் பொன் விமலா அழகாக எடுத்துரைத்துள்ளார்.


நேரடியாக ஒரு பெண்ணின் உடல் வேணும்னு கேட்டா செருப்பு பிஞ்சிரும்னு சொல்வோம். நட்பாகி உடல் வேணும்னு கேட்டா தொடப்பக்கட்டை பிஞ்சிரும். கூடவே மனசு வலிச்சு அழுவோம். உண்மை தான். அப்போ எப்படிதான் கேக்குறதுனு குழப்பம் வேற. காதல், நட்புன்னு பழகுறதே மேட்டருக்காக தான்னு ஒரு பொதுபுத்தியை ஒருபக்கம் வளர்த்து வச்சிருக்குறதாலதான் ஆண் பெண் நட்பு இந்த சமூகத்துல இப்பவும் இயல்பா இருக்க முடியறது இல்ல.

காதலன்- காதலி, கணவன் - மனைவி அல்லாத பொதுவான இருவர் கொள்ளும் உறவு குறித்து தான் அந்த பதிவு பேசுவதாக நினைக்கிறேன். அதற்கு அவ்வளவு மெனக்கெடல் தேவையில்லை. தான் ஒரு உடல்பகிர் விரும்பி என்பதை பொதுவெளியில் விளம்பரப்படுத்திக் கொண்டால் தானாகவே விருப்பம் உள்ளவர்கள் அணுகிக் கொள்வார்கள்.


இன்பாக்ஸ் வரை சென்று கதவு தட்டி எனக்கு விருப்பம். உனக்கு இருக்கிறதா என்பது...அடுத்தவர் வீட்டுக்குள் அனுமதியின்றி நுழையும் அநாகரிகத்துக்குச் சமம். நீங்கள் பழகி ஏமாற்றவும் வேண்டாம். எடுத்ததும் அவ்வாறு கேட்டு காயப்படுத்தவும் வேண்டாம். நீங்கள் காதலன், கணவன் என்கிற எவ்வித பந்தமும் விரும்பாத உடல்பகிர் விரும்பி என்று பொதுவெளியில் தைரியமாக பிரகடனப்படுத்துங்கள். விரும்புவோர் கதவு தட்டட்டும்!

நன்றி: பொன் விமலா, ஊடகவியலாளர்