ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்! உறுதியாகச் சொன்னாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

அரசியல் வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என்று ரஜினி சொன்ன விவகாரம்தான் இன்றைய ஹாட் டாபிக்.


அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் நிச்சயம் வருவார் என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்தை தளபதி ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று துரைமுருகன் பேசியதை மக்கள் காமெடியாகத்தான் பார்க்கிறார்கள்.

ஆனால், சமீபத்தில் ரஜினியை சந்தித்துவந்த பொன்னார், இன்று விடுத்திருக்கும் செய்திதான் அதிர்ச்சி தரக்கூடியது. ஆம், என் மீது மதச்சாயம் பூசப்படுகிறது என்று ரஜினி விடுத்த ஸ்டேட்மென்ட்டுக்குப் பதில் விடுத்தது போல் இருக்கிறது.

அதாவது, ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை; இமயமலைக்கு செல்லும் ரஜினியை காவி மயமாக்க வேண்டிய தேவையில்லை!; அது பாஜகவின் வேலையுமல்ல!’ என்று கூறியிருக்கிறார் -பொன்.ராதாகிருஷ்ணன். 

இப்படித்தான் பொன்னார் சொன்னார் என்றால், ரஜினிகாந்த் இமயமலைக்குப் போவாரே அரசியலுக்கு வரமாட்டார் என்பதுதான். இப்படி சொல்லிட்டீங்களே பொன்னார்..?