என் மகன் யோக்கியன்! நீதிமன்றத்தில் சலம்பிய பொள்ளாச்சி திருநாவுக்கரசின் தாய் வீடியோ!

தன் மகன் யோக்கியன் என்று கூறி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் திருநாவுக்கரசின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.


பெண்களை மயக்கி அ வர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்தவர்களில் மிக முக்கியமானவர் திருநாவுக்கரசு. அவனுக்கு ஜாமீன் கோரி அவனது தாயார் லதா மனு தாக்கல் செய்தார்.

ஆனால் கைது செய்வதற்கு முன்னர் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்ததாக கூறிஅவனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவனது தாயார் நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருந்த வழக்கறிஞர்கள் சிலர் உன் மகன் செய்தது நியாயமா? அவனுக்கு ஜாமீன் கேட்டு வந்துள்ளாயே என்று கேட்டனர். அதற்கு என் மகன் யோக்கியன்.

அவன் எந்த தப்பும் செய்யவில்லை. நீங்கள் எல்லாரும் பொய் சொல்கிறிர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான சில வழக்கறிஞர்கள் இப்படி ஒரு மகனை பெத்ததற்கு நீ செத்துப்போகலாம் என்று கூறினார்.

இதனால் கோபம் அடைந்த திருநாவுக்கரசின் தாய் லதா சண்டை போட்டுக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார். திருநாவுக்கரசின் தாய் – வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தால் சிறிது நேரம் பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.