அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு! அவனால செக்ஸ் வச்சுக்க முடியாது! பொள்ளாச்சி திருநாவுக்கரசின் தாய் கதறல்!

பொள்ளாச்சி பெண்கள் ஆபாச வீடியோ விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் நபர் திருநாவுக்கரசு.


 திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் வைத்துதான் பெண்கள் விரட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு ஆபாச படம் எடுக்கப் பட்டுள்ளனர். இதனால்தான் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தன்னுடைய மகன் நிரபராதி என்றும் அவனுக்கும் இந்த விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவனுடைய தாய் லதா தொடர்ந்து கூறி வருகிறார். வார இதழ் ஒன்றுக்கு லதா அளித்துள்ள பேட்டியில் தனது மகன் திருநாவுக்கரசு எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவன் இதுவரை இரண்டு பெண்களிடம் ஏமாந்து உள்ளதாகவும் பரபரப்புத் தகவலை கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னுடைய உறவினர் பெண்ணை திருநாவுக்கரசு காதலித்ததாகவும் ஆனால் திருமண சமயத்தில் அந்தப் பெண் வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து திருநாவுக்கரசர் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். இதன்பிறகு நகைக்கடை அதிபர் ஒருவருடைய மகளை திருநாவுக்கரசு தீவிரமாக காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணுக்கும் எனது மகனுக்கும் என்னுடைய வீட்டில் வைத்து திருமணம் செய்து வைத்ததாகவும் லதா கூறியுள்ளார்.

நகைக்கடை அதிபர் மகளை திருமணம் செய்த நிலையில் திடீரென திருநாவுக்கரசர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. திருநாவுக்கரசின் தலையில் பலத்த காயம் அடைந்ததால் அவனால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை.

இதனால் எனது மகன் திருநாவுக்கரசை விட்டு பிரிந்து அந்த நகைக்கடை அதிபரின் மகள் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் திருநாவுக்கரசுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து நான் தற்போது அவனை வாழ வைத்து இருந்தேன். விபத்தில் அடிபட்டு தலையில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசர் செக்ஸ் உள்ளிட்ட இல்லற வாழ்க்கையில் நிச்சயமாக ஈடுபட முடியாது.

அப்படி இருக்கும்போது எப்படி திருநாவுக்கரசர் பெண்களை சீரழித்து இருக்க முடியும். இவ்வாறு திருநாவுக்கரசின் தாய் லதா கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் திருநாவுக்கரசு தவறு செய்ததாக கூறவில்லை மாறாக திருநாவுக்கரசு பெண்களை மயக்கி அவர்களை தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்கிய பணம் சம்பாதித்ததாக புகார் உள்ளது. இந்தப் புகார் குறித்து திருநாவுக்கரசின் தாய் லதாவால் எந்த பதிலும் கூற முடியவில்லை.

இதனிடையே எந்த வேலையும் செய்யாமல் பைனான்ஸ் செய்து கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் திருநாவுக்கரசின் வீட்டில் நான்கு சொகுசு கார்கள் நிற்கின்றன. திருநாவுக்கரசின் வீடும் சொகுசு பங்களா போல் தான் உள்ளது. திருநாவுக்கரசின் தந்தை அவர் உடன் இல்லாத நிலையில் திருநாவுக்கரசருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது.

திருநாவுக்கரசருக்கு இந்த அளவிற்கு சொத்துக்கள் சேர்ந்தது எப்படி என்கிற கேள்விக்கு லதாவால் பதில் சொல்ல முடியவில்லை