பொள்ளாச்சி ஸ்ரீமதி மஞ்சுளா! அன்று வெறும் ரூ.5ஆயிரம் முதலீடு! இன்று கோடிக்கணக்கில் வரவு செலவு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5,000 ரூபாய் முதலீட்டில் பெண்கள் பிரத்யேக ஆடை தயாரிப்பில் கால் பதித்த பெண் தற்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார்


பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்து படித்த ஸ்ரீநிதி மஞ்சுளா காதலித்து திருமணம் செய்த பின் கூட்டுக் குடும்பமாக ஒரு சராசரி மனுஷியாகத்தான் வாழ்ந்து வந்தார். இவருக்கு சக்தி ஆதர்ஷ், நிஜிந்திரவாணன் என்ற பெயர் கொண்ட 2 பிள்ளைகள். 

ஆரம்பத்தில் நன்றாக சென்ற வாழ்க்கை நாளடைவில் ஸ்ரீநிதியின் முன்னேற்றத்துக்கு அவரது கணவரே தடை கல்லாக இருந்துள்ளார். இதனால் எப்படியாவது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என முடிவு எடுத்த ஸ்ரீநிதி தையல் பயிற்சியில் சேர்ந்தார். பலர் இவருடைய உழைப்பை பார்த்து கேலி, கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தால் ஒவ்வொரு படியாக மேல் எடுத்து வந்தார்.

அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஸ்ரீநிதியின் வளர்ச்சிக்கு அவரது மாமியார் ரத்னகுமாரி ஆதரவா இருந்து பெரிதும் உதவி உள்ளார். மேலும் ஸ்ரீநிதி பணி நிமித்தமாக இருக்கும்போது அவரது குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொண்டார் மாமியார். ஆனால் சில நாட்களில் மாமியார் இறந்து விட ஸ்ரீநிதி 2004 –ல் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஒரு தையல் மெஷின், ஒரு உதவியாளர், 5,000 ரூபாய் முதலீட்டில் தொழிலை ஆரம்பித்த ஸ்ரீனிதி பெண்களுக்கான பிரத்யேகமான சேலைகளையும் வித்தியாசமான டிசைன்களுடன் கூடிய ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது ஸ்ரீநிதியிடம் 50 பேர் வேலை செய்கிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் தன்னுடைய நிறுவனமான `ஆதுநிஸ்' கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் ஸ்ரீநிதி. மேலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகளுக்கு ஆடை வடிவமைப்பு தொழிலை கற்றுக் கொடுக்கவும் ஸ்ரீநிதி திட்டமிட்டுள்ளார். தொழில் தொடங்க பெரிய அளவுல பணம், முதலீடுனு இருக்கணுங்கிற அவசியமில்லை.

நமக்கு என்ன திறமைன்னு கண்டுபிடிச்சு, அதையே மூலதனமாக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி என்கிறார் ஸ்ரீநிதி.