ஓடும் பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்த விபரீதம்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பலத்த காற்றின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


வடக்குபாளையத்திலிருந்து பொள்ளாசிக்கு சென்று கொண்டிருந்த நகரப்பேருந்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.பலத்த காற்று வீசியதால் எதிர்பாரத விதமாக பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. பயணிகள் பயத்தில் அலறி கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனை அடுத்து மேற்கூரையை சரிசெய்வதற்காக பேருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு செல்லபட்டுள்ளது, வழக்கமாக பேருந்து நிலைய மேற்கூரை பெயர்ந்து விழும் ஆனால் இந்த முறை ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தின் கூரை விழுந்தது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தில் இருந்த பயணிகள் இதனால் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறகு அவர்கள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.