கை மணிக்கட்டு உடைப்பு! துண்டு துண்டாக்கப்பட்ட விரல்கள்! விடிய விடிய சித்ரவதை! பிரகதி கொலையில் திடுக் தகவல்!

இளம் பெண் பிரகதி கொலை வழக்கில் அவர் இரவு முழுவதும் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக திடுக் தகவல் வெளியாகியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவன் நாயக்கன்பட்டியில் சேர்ந்தவர் பிரகதி. 20 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2 ஆம் ஆண்டு பயின்று வந்தார். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த நாட்டுப்புற என்பவரை பிரகதிகாதலித்து வந்தார். இதனை அறிந்த இரு வீட்டாரும் பிரகதி நாட்டு துறை திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அடுத்த மாதம் ஒட்டன்சத்திரத்தில் பிரகதி நாட்டு துறைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து கோவைக்கு சென்று புத்தாடை எடுத்து விட்டு ஒட்டன்சத்திரம் வருவதாக வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார் பிரகதி. ஆனால் குறித்த நேரத்திற்குள் பிரகதி வீட்டுக்கு வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர் உடனடியாக கோவை சென்றுள்ளனர்.

கல்லூரியிலும் பிரகதி இல்லாத காரணத்தினால் காந்திபுரம் மற்றும் கோட்டூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தான் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்தச் சடலம் பிரகதி என்பதை பெற்றோர் உறுதி செய்தனர். இதனையடுத்து பிரகதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட பிரேத பரிசோதனையில் பிரகதி மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிரகதியின் கை மணிக்கட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவரது கை விரல்களும் துண்டு துண்டாக பட்டுள்ளன. கொலையை ஒரு சாதாரண நபர் செய்தது போல் அல்லாமல் ஒரு சைக்கோ நபர் செய்தது போல் இருக்கிறது. இதனை அறிந்த பிரகதியின் பெற்றோர் கதறி துடித்தனர்.

இந்த நிலையில் பிரகதி கொலை தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சதீஷ் என்கிற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சதீஷ் பிரகதியின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. எனவே ஒருதலைக்காதலால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். உறவினர் ஒருவரே இப்படி கொடூரமாக பிரகதியை கொலை செய்திருப்பது கேட்போரை அதிர வைத்துள்ளது.