பொள்ளாச்சி பெண்கள் வழக்கு! முக்கிய நபரை தூக்கியது சிபிஐ! அதிரடி திருப்பம்!

பொள்ளாச்சி பெண்கள் வழக்கில் சிபிஐ முதல் முறையாக ஒரு இளைஞனை கைது செய்துள்ளது.


பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அவர்களை தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திய வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு உண்மையில் சிபிஐ வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.

முதற்கட்டமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 4 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் மூலம் மணி என்கிற ஒருவனை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த மணியை இன்று கோழி அமுக்குவது போல் அமுக்கி உள்ளது சிபிஐ.

இதன் மூலம் பொள்ளாச்சி பெண்கள் வழக்கில் ஐந்தாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் சிபிஐ முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மணி கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலரை விசாரணை வளையத்திற்குள் சிலரை கைது செய்யவும் சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சிபிஐ ஐந்தாவது நபரை கைது செய்ததன் மூலம் பொள்ளாச்சி பெண்கள் வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக கருதலாம்.