அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச வீடியோ! பின்னணியில் பெரிய இடம்! வேட்டையாடுமா சிபிஐ?

மொத்தமே நான்கு வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது என்று காவல்துறை அதிகாரி உறுதியாக மீடியாக்கள் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். ஆனால், தினம் ஒரு வீடியோ வெளியாகிக்கொண்டு இருக்கிறது.


யார் இவற்றை வெளியிடுவது, எப்படி தடுப்பது என்று தெரியாமல் போலீஸார் அதிர்ந்து நிற்கிறார்கள்.

இந்த விவகாரம் சாதாரண செக்ஸ் ஸ்கேண்டில் போன்று வந்த வேகத்தில் காணாமல் போய்விடும் என்றுதான் போலீஸ் நினைத்தது. ஏனென்றால் பொள்ளாச்சியில் இந்த விவகாரம் கிட்டத்தட்ட 7 வருடங்களாக நடப்பது அவர்களுக்குத் தெரியும்.  பார் நாகராஜன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோவும் போலீஸில் சிக்கியுள்ளது. ஆனால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நபர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதும், ஏராளமான பணம் புழங்குவதும் போலீஸாருக்குத் தெரியும். அதனால்தான் எப்படியாவது மூடி மறைக்கப் பார்த்தனர். ஆனால், இந்த சிக்கலில் மாட்டியவர்கள் இப்போது வெளியிடும் வீடியோதா தமிழகத்தை உலுக்கி வருகிறது.

அதுவும் அண்ணா... அடிக்காதீங்கண்ணா... எல்லாத்தையும் கழட்டிடுறேன்... சீக்கிரமா வீட்டுக்குப் போகணும் என்ற கெஞ்சல் தமிழர்களை உலுக்கிவிட்டது.

இனிமேல் சி.பி.ஐ. பார்த்துக்கொள்ளும் என்று காவல்துறை இந்த விவகாரத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடிவு செய்தால், இன்னமும் நிறையவே வீடியோக்கள் வெளிவரும் என்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேர் இருப்பதால் வீடியோ வெளிவருவதை தடுக்கவே முடியாது. இனியாவது அயோக்கியர்களை வேட்டையாடுங்க போலீஸ், இல்லைன்னா மக்கள் வேட்டையாடத் தொடங்கிடுவாங்க.