பாலியல் வல்லுறவு கொண்டோம்! பெண்களை பங்கிட்டு கொண்டோம்! பொள்ளாச்சி திருநாக்கரசு நண்பன் பரபரப்பு வாக்குமூலம்!

பொள்ளாச்சி வழக்கில் பெண்களை பாலியல் வன்கொடுமைய் செய்து வீடியோ எடுத்ததாக திருநாவுக்கரசுவின் 5-வது நண்பனான மணிவண்ணனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


பொள்ளாச்சியில் காதல் என்ற பெயரில் கல்லூரி பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியான நிலையில் அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது.

திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜன், மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தலைமறைவான மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். 

அவனை சி.பி.சி.ஐ.டி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து தானும் பண்ணை வீட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான். இதையடுத்து, பொள்ளாச்சி போலீஸார் பதிவு செய்த வழக்கை விடுத்து, ஐந்துபேர் மீதும் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.