அடுத்த மாதம் திருமணம்! ஆனால் அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த கல்லூரி மாணவி! பொள்ளாச்சி பயங்கரம்!

பொள்ளாச்சியில் மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரகதி என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிரகதியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகதியை தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணும் காணாமல் போனதாக கூறப்பட்ட பிரகதியின் அடையாளங்களும் ஒத்துப் போனது.

இதனையடுத்து பிரகதியின் பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஏனென்றால் அங்கு உயிர் இழந்து கிடந்தது அவர்களது மகள் பிரகதி தான் என்பதை உறுதிப்படுத்தினார். கழுத்து அறுக்கப்பட்டு பிரகதி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவு விவகாரத்தால் பொள்ளாச்சி ஏற்கனவே அதிர்ந்து போயுள்ள நிலையில் தற்போது இளம் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.