வாடகை வீடு! கணவன் - மனைவி! இளம் அழகிகள்! பொள்ளாச்சியை கலக்கும் பாலியல் தொழில்!

வடமாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத் தொழில் செய்த தம்பதியை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கைது செய்தது காவல்துறை.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அனுப்பர்பாளையத்தில் ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அந்த வீட்டிற்கு புதிய புதிய ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

பொதுமக்கள் புகாரை அடுத்து அந்த வீட்டை கண்காணித்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு சட்ட விரோத செயல் நடைபெறுவதை உறுதிப்படுத்தினர். பின்னர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அங்கு விபச்சாரத் தொழில் செய்த புரோக்கர் செல்வராஜ், அவரது மனைவி ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

மேலும் விபச்சாரத்திற்காக இருந்த மற்ற மாநிலத்தை சேர்ந்த பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த பாலியல் தொழிலில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள வீட்டு உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டதால் தற்போது நிம்மதியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சி என்றாலே சமீப காலமாக பெண்கள் பாதிக்கப்படும் செய்தி வந்த வண்ணம் உள்ளது. காவல்துறை விசாரணையில் தோண்ட தோண்ட புதுப்புது குற்றவாளிகள் கையில் சிக்குகின்றனர்.