பா.ஜ.க.வை புரட்டிப்போட்ட அரசியல் சாணக்கியர்கள்! மகாராஷ்டிராவில் மெகா திருப்பம்!

மகாராஷ்டிர அரசியலில் இன்றைய நிதர்சன அரசியல் சாணக்கியன் யார் என்றால் மெத்த பொருந்தக்கூடிய வாக்கியம் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையே சாரும்.


தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் மாநில கட்சிகளை ஒழிக்க மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு.. பல மாநிலங்களில் மாநில கட்சிகளை புறந்தள்ளி தங்கள் ஆளுமைகளை விஸ்தரித்து வரும் இந்த சூழலில்.. இந்தியாவே ஆச்சரியப்படும் அளவிற்கு மராட்டியத்தில் மண்ணை கவ்வி உள்ளது பாரதிய ஜனதா.

கடந்த மாதம் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா ஹரியானா மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் அறுதிப் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத சூழலில்.. 

எப்படியாவது மீண்டும் பாஜகவின் ஆட்சியை நிலைநிறுத்த இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்தது இந்த கட்சி. இந்த வேளையில்.. மராட்டிய மைந்தர்களுக்கே முன்னுரிமை என்ற முழக்கத்தை உரக்கக் கூறி வரும் சிவசேனா.! முதலமைச்சர் நாற்காலி கேட்டு தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள பாஜக முடியாமல் திக்கித் திணறி வந்தது சில நாட்களாக.

கர்நாடகம் மற்றும் அசாமில் எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைத்தது போல.. மகாராஷ்டிராவில் சிவசேனாவை புறந்தள்ளி விட்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கட்சியுடன் புதிய கூட்டணி அமைக்க அந்தக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது பாஜக. 

ஆனால் சரத் பவார், உத்தவ் தாக்கரே காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து பாரதிய ஜனதாவிற்கு எதிராக புதியதொரு கூட்டணி அமைத்தனர். மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சியினரை வளைத்து ஆட்சியை தக்க வைத்தது போல சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் துணைத் தலைவர் அஜித்பவாரை வளைக்க திட்டமிட்டு.. 

அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் அடுத்த 5ஆண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடரலாம் என்கிற பாஜகவின் கனவை தகர்த்தது சிவசேனா மற்றும் காங்கிரஸ்.

அதே வேளையில் தேசியவாத காங்கிரஸின் துணை தலைவராக இருந்த அஜித்பவார் மீது பாஜகவால் போடப்பட்ட 7,000 கோடி முறைகேடு வழக்கையும் தள்ளுபடி செய்து, அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியையும் கொடுத்து அழகு பார்த்த பாரதிய ஜனதாவின் முகத்தில் கரியை பூசிவிட்டு வந்துள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் அஜித் பவார். 

ஊழலை ஒழிப்பதாக கூறும் பாரதிய ஜனதா.. இப்படித்தான் ஊழலை ஒழிக்கிறது என்று நெட்டிசன்களால் பலவாறாக விமர்சிக்கப்பட்டு வந்த இந்த வேளையில். மகாராஷ்டிரத்தில் நடைபெற்று வந்த அரசியல் சித்து விளையாட்டுகள் இறுதித் தருணத்தில் எட்டியுள்ளது. 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி ஆளுநர் ஆதரவுடன் அரியணையில் அமர்ந்தார் தேவேந்திர பட்னாவிஸ் 

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பாரதிய ஜனதாவிற்கு எதிராக திரும்பியுள்ள இந்த சூழ்நிலையில். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென நடுசாமத்தில் மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.

தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி, இந்திய ஊடகங்கள் அனைத்தும் சிறந்த ராஜதந்திரி என்ற பட்டம் கொடுத்து புகழ்ந்தன பாரதிய ஜனதாவின் முதல்வரை. ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்ற எதிர் கட்சியினர். பல்வேறு தரப்பிலான ஆதாரங்களை திரட்டி வாதாடுகையில்.

27 ஆம் தேதி காலை மகாராஷ்டிர சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலை மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மஹாராஷ்டிரா பாஜகவில் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் பட்னாவிஸும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணங்களைக் கூறி சிவசேனா பாரதிய ஜனதா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களித்திருந்தனர் இருந்திருந்தாலும் சிவசேனா எங்களை ஏமாற்றி விட்டது என்ற குற்றச்சாட்டுகளை கூறி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பதவியேற்று 80 மணிநேரம் முடிவதற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்துள்ளது மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது. இதே சித்து விளையாட்டுகள் மூலம், கர்நாடகாவில் ஆளுங்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக வைத்து.

தற்போது பின்வாசல் வழியாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாரதியஜனதா. தமிழகம், அசாம், நாகலாந்து, மேகாலயா, கோவா, ஹரியானா, ஜார்கண்ட் என பல மாநிலங்களில் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் தனது ஆட்சியை விஸ்தரிக்க நினைத்த பாரதிய ஜனதாவின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது மாநில கட்சிகளின் இரும்புக் கரங்களால்..

மணியன் கலியமூர்த்தி.