நடிகை பிரியா ஆனந்திடம் வரம்பு மீறிய நாஞ்சில் சம்பத்! வைரல் வீடியோ உள்ளே!

நடிகை பிரியா ஆனந்திடம் வரம்பு மீறி நடந்து கொண்ட நாஞ்சில் சம்பத்தின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.


ம.தி.மு.கவில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சுத் திறனுக்கு இளைஞர்கள் ஏராளமானோர் ரசிகர்கள். அதிமுக உடைந்த போது தினகரனுக்கு பக்கபலமாக இருந்து ஓ.பி.எஸ்சை தெறிக்கவிட்டவர் நாஞ்சிலார்.

 

தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அரசியல் நடவடிக்கைகளில் இருந்து நாஞ்சில் சம்பத் ஒதுங்கி நிற்கிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் உள்ள தனது பிரபலத்தை காசாக்கும் வகையில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 

ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள எல்கேஜி படத்தில் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

எல்.கே.ஜி படம் தொடர்பான விளம்பரத்திற்கு எப்.எம் ஸ்டேசன் ஒன்றுக்கு நடிகை பிரியா ஆனந்துடன் நாஞ்சில் சம்பத் சென்று இருந்தார். அப்போது திடீரென தனது கையில் இருந்த பூங்கொத்தை எடுத்து காதலன் காதலிக்கு கொடுப்பதை போல் மண்டியிட்டு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

 

இதனை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த பிரியா ஆனந்த் சிரித்தபடியே அதனை வாங்கிக் கொண்டதுடன் நாஞ்சில் சம்பத்தை கட்டியும் அணைத்துவிட்டார். இந்த வீடியோவை எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.

 

முதலில் இது குறித்து தெரியாமல் பலரும் பல கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர். பின்னர் தான் எப்.எம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுக் கொண்டதால் நாஞ்சில் சம்பத் அப்படி நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.