போலீசை வைத்து மிரட்டுகிறார்! கிரண்பேடிக்கு எதிராக அவரது பேத்தி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

போலீசை வைத்து தனது தந்தையை கிரண்பேடி மிரட்டுவதாக அவரது பேத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.


டெல்லி முதலமைச்சர் கனவோடு தேர்தலில் நின்ற கிரண்பேடி தோல்வியுற்ற காரணத்தால் அவருக்கு புதுச்சேரி ஆளுநர் பதவியை மத்திய அரசு வழங்கியது. அந்தப் பதவி வகித்து வரும் கிரண்பேடி அப்போது முதலே புதுச்சேரி அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

திடீரென்று ஆய்வில் ஈடுபடுவது, அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்குவது, தலைக்கவச விவகாரத்தில் தலையிடுவது என இவர் செய்யும் வேலைகள் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் கிரண் பேடியின் சொந்த பேத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான பிரச்சினையில் ஏன் பாட்டி தலையிடுகிறீர்கள் என அச்சிறுமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் தனது தந்தையுடன் இருப்பதாகவும் வீடியோ வில் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையையும் அந்த வீடியோவில் அழைத்து காட்டும் சிறுமி தனக்கு ஆதரவு தெரிவிக்க கமெண்டில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தாய் தந்தை பிரச்சனை இடையில் வரமாட்டேன் எனக் கூறிவிட்டு தற்போது மட்டும் போலீசை விட்டு தனது தந்தையை மிரட்டுவது ஏன் என அச்சிறுமி கேள்வி கேட்டுள்ளார்.

இதில் ஆளுக்கு முன்னதாக முந்திக் கொண்ட கிரண் பேடி தனது பேத்தியின் இந்த பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பதிவிட்டுள்ளார்