இனிமேல் போலீஸ்காரர்கள் தமிழில்தான் திட்டுவார்களாம்! தமிழ் வளரட்டும்!

காவல் துறையினர் ஆங்கிலத்தில் எழுதுகிறேன் என்று எசகுபிசகாக எழுதி வைக்கும் காரணத்தால், அதனை புரிந்துகொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறதாம்.


அதனால், ஒழுங்காக எல்லாவற்றையும் தமிழில் எழுதுங்கள் என்று உத்தரவு போட்டார் காவல் துறை தலைமை இயக்குனர் திரிபாதி. அவருக்கு முதன்முதலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அதனையடுத்து -- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளபாராட்டில், ‘தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடிதத் தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும்.. கனிவு பெருகட்டும்! என்று கூறியுள்ளார். காவல் துறையில் தமிழ் மொழியை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதுடன் நல்ல தமிழில்தான் பேச வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால், கேவலம் கேவலமாக கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்களே.