சாலையை கடந்த குட்டைப் பெண்மணி! போலீஸ் வேனால் நொடியில் நிகழ்ந்த பயங்கரம்! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி!

கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது பின்னால் வந்த போலீஸ் வாகனம் மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


வினாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில் வினாயகர் சிலைகளை கிணறு, ஏரி, ஆறு, கடல் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கரைத்த வருகின்றனர். கோவை மாநகரிலும் விநாயகர் சிலைகளை முத்தன்ன குளத்தில் கரைப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு காவலர்களை இறக்கி விடுவதற்காக போலீஸ் வாகனம் ஒன்று வந்தது.

காவலர்களை இறக்கிய பின்னர் வாகனம் மீண்டும் புறப்பட்ட போது போலீஸ் வாசனத்தின் முன்னால் ஒரு குட்டை பெண் நடந்து சென்றுற்றார். இதனைக் கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் அந்த பெண்ணின் மீது போலீஸ் வேன் மோதியது. இந்த விபத்தில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் கோவை மாவட்டம் பேரூர் பகுதியைச் சேர்ந்த கலா (55) என்பது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீஸ் வேன் மோதி கலா உயிரிழந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.