கோவிலுக்கு சென்று மொட்டை போட்டுக்கொண்ட திருச்சி போலீஸ்காரர்கள்! காரணம் எய்ட்ஸ் முருகன்! ஏன் தெரியுமா?

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்தற்கு மொட்டை போட்ட சம்பவம் திருச்சி காவல் நிலையத்தில் நடந்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் உள்ள சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி சுவற்றில் துளையிட்டு லாக்கரில் வெல்டிங் செய்து, சுமார் 470 சவரன் நகை மற்றும் 19 லட்சம் ரொக்கத்தை கொள்ளை அடித்த சென்றுள்ளனர் கொள்ளை கும்பல்.

இந்த கொள்ளை சம்பத்தை அடுத்து வழக்குப் பதிவு செய்து, நான்கு தனிப்படை காவ்ல் துறையினர் தேர்வு செய்து சுமார் 300க்கும் மேற்பட்டோரை விசாரித்து துப்பு துலைக்கியது தனிப்படை தலைமை அதிகாரியுடன்.

இந்த நிலையில், தனிப்படையை சேர்ந்த தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் காவலரான ஹரிஹரன் ஆகியோர் கொள்ளையர்கள் சிக்கினால் கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலிலும் மற்றொரு காவலரான ஹரிஹரன் சமயபுரம் கோவிலில் முடியை காணிக்கை கொடுப்பதாக வேண்டிக் கொண்டனர். 

இதற்கிடையே, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகன், அவனது கூட்டாளி சுரேஷ் ஆகியோருடன் தஞ்சையைச் சேர்ந்த வெல்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தான் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து, வங்கி கொள்ளையில் தொடர்புடைய அனைவரும் சிக்கியுள்ள நிலையில், தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் ஹரிஹரன் இருவரும் கோவிலுக்கு சென்று முடியை காணிக்கை செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒவ்வோரு வழக்கிற்கும் மொட்டை போட்டால் காவல்துறையினர் மொட்டையுடன் தான் அலைய வேண்டும் என்றும் பல நெட்டிசன்கள் இணையத்தில் கலைத்தும் வருகிறார்கள்.