மதுரையில் மோட்டார் பைக்கில் சென்றவர் மீது போலீஸ் லத்தி வீசியதால் கணவர் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
வரம்பு மீறிய போலீஸ்காரர்! கைக்குழந்தையை விட்டுவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!
மதுரையில், எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த விவேகானந்தகுமார் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 15-ந் தேதி மோட்டார் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது அவர் ஹெல்மெட் போடவில்லை என்று சொல்கிறாகள். இதனால் போலீசார் அவரை நிறுத்திய போதும் அவர் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்கார் ஒருவர் லத்தி வீசியதில் அது மேலே பட்டு விவேகானந்த குமார் கீழே விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். கணவரை இழந்த மன உளைச்சலில் இருந்த மனைவி கஜபிரியாவும், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார், இதில் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், 1 1/2 வயது ஆண் குழந்தை சாய் அவின். தாயின் அரவணைப்பிற்க்காக ஏங்கி பரிதாபமாக நிற்கும் காட்சி பார்ப்பவரை உடையச்செய்கிறது. சாய் அவின் தந்தை ஏற்கனவே இழந்த நிலையில் தற்போது தாயும் உயிருக்கு போராடுவது குழந்தையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
விவேகானந்த குமாரின் மீது போலீசார் லத்தியை வீசியது குறித்து முறையான விசாரணை மேற்க்கொள்ள அவரது உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.