வீட்டு பணிப் பெண்ணுக்கு போலீஸ் எஸ்ஐ செக்ஸ் டார்ச்சர்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

வீட்டு பெண் பணியாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கஞ்சூர் மார்க் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் பிரஃபுல் அகவானே. கடந்த ஓராண்டுக்கு முன் இவரது மனைவி இவரைப் பிரிந்து சென்ற நிலையில் சமையல், வீட்டுப் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இரு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் பணியாளரை பணிக்கு அமர்த்தினார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இதையடுத்து திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து அந்தப் பெண்ணை பிரஃபுல் ஆசைக்கு இணங்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் நெருக்கம் அதிகமானது  போல்  தகராறும் அதிகரிக்க பிரஃபுல் அந்தப் பெண்ணை தாக்கியதாகவும், அறைக்குள் வைத்து பூட்டி வைத்துவிட்டுகாவல் நிலையத்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் திருமணம் செய்ய வாக்குறுதி அளித்தபடி நடந்துகொள்ளவில்லை என பிரஃபுலிடம் அந்தப் பெண் தகராறு செய்ய மீண்டும் அந்தப் பெண்ணை தாக்கி அறையில் அடைத்து வைத்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் மும்பையிலேயே வசிக்கும் தனது சகோதரனை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு தனது நிலைமையை விவரித்ததையடுத்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் பிர்ஃபுலின் வீட்டுக்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டனர். பிரஃபுல் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.