நான் கர்ப்பமாக இருக்கிறேன்! கதறிய பெண்! சுட்டுக் கொன்ற போலீஸ்! அதிர வைக்கும் காரணம்!

டெக்சாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் 44 வயது மதிக்கதக்க பெண்ணை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது

கடந்த திங்கட் கிழமை இரவு தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரியின் பெயர் பாதுகாப்பு கருதி இன்னமும் வெளியிடபடவில்லை

டெக்ஸாஸ் நகரத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பைட் டவுனில் குடியிருப்பில் இரவு  10:40 மணியளவில்  பமீலா  அந்தோ டர்னர் என்ற பெண்மனி வழக்கம் போல நடை பயிற்சி செல்கிறார் அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி அவருக்கு குற்றச்செயலில் சம்பந்தம் இருப்பதாக கூறி அவரை பிடித்து கைது செய்ய முயல்கிறார்.

இதனை அங்கிருந்த மற்றொருவர் படம் எடுத்திருக்கிறார், சமூக வலைதலங்களில் பரவும் இந்த வீடியோவில் அந்த பெண் நான் கர்ப்பமாக இருக்கிறேன் வீட்டிற்க்குதான் செல்கிறேன் என கூறுகிறார்  காட்சிமுழுவ்துமாக  இருட்டாக உள்ளது அந்த அதிகாரிடம் இருந்து தப்பிக்க தொடர்ந்து முயற்சிக்கிறார்

திடீரென  ஒரு ஸ்டன் துப்பாக்கியின் ஒலிக்கிறது அந்த பெண் கீழே விழுந்து  தான் கர்ப்பமக இருப்பதாக கதறுகிறார் இருப்பினும் அந்த அதிகாரி அந்த பெண்ணை பார்த்து சரமாரியாக சுடுகிறார். இறந்த பென்ணின் உடற்கூறு ஆய்வில் அவர் கர்ப்பமாக இல்லை என தகவல்

 துப்பாக்கிச் சூட்டின் போது  ஒரு அதிகாரி உடலின் மீது  கேமராவை அணிந்திருந்திருக்கிறார் ஆனால் விசாரணை தொடர்கிறது என்பதால், அதிகாரிகள் அந்த காட்சிகளை வெளியிடவில்லை

ட்ர்னரின் கணவர் மற்றும்  அவரது இரு குழந்தைகளுக்கும் அவரது மரணம் குறித்த சரியான காரணம்  இதுவரை தெரிவிக்கப்படவில்லை என தகவல் மேலும் 2019 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், குறைந்தபட்சம் 323 நபர்கள் அமெரிக்காவில் போலீசால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது