ஆண்களின் அந்த உறுப்பை வேட்டையாடும் சைக்கோ: நெருங்கிய சென்னை போலீஸ்!

சென்னை: ஆண்களின் மர்ம உறுப்பை வேட்டையாடும் சைக்கோ நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


சென்னை மாதவரத்தில் சமீபத்தில் குடிபோதையில் இருந்த 2 பேரின் மர்ம உறுப்பை யாரோ ஒருவர் அறுத்தெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, மே 26ம் தேதி அன்று மாதவரம் பகுதியில் மர்ம உறுப்பு சிதைந்த நிலையில் ஒரு மயங்கி கிடந்தார். அவரை விசாரித்த போலீசார், அவரது பெயர் அஸ்லாம் பாஷா என அடையாளம் கண்டறிந்தனர். இதன்பின், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுபற்றி சாட்சி அளித்த அவரது மனைவி, நோன்பு காலம் என்பதால், எனது கணவர் குடிப்பதில்லை, இதில் எதோ மர்மம் உள்ளது எனக் கூறினார்.  இந்நிலையில், ஜூன் 3ம் தேதி காலையில் மாதவரம் பகுதியில் நாராயணன் என்பவர் மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில், கிடந்தார். கூலி வேலை செய்துவரும் அவர், முந்தைய நாள் இரவு, திருநங்கையுடன் சல்லாபிக்க இந்த பகுதிக்கு வந்திருக்கிறார். அப்போது மர்ம நபர் இவ்வாறு செய்ததாக, போலீசாரிடம் கூறியுள்ளார்.

அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விரு சம்பவங்களும் ஒரே மாதிரி உள்ளதால், மாதவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக, போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக, அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், இது ஒரு சைக்கோ நபரின் செயல் என உறுதி செய்துள்ளனர்.

மாதவரம் பகுதியில், லாரி தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் பலர் விபசாரம் செய்பவர்களை நாடுவது வழக்கம். இங்கு, விபசாரம் ரகசியமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையாளராக உள்ள ஒரு நபர், இவ்வாறு மர்ம உறுப்புகளை அறுப்பதை வாடிக்கையாக செய்துவருவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த நபரை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும், போலீசார் குறிப்பிடுகின்றனர்.