நேற்று கர்ப்பிணி பூனை..! இன்று 2 மங்கூஸ்கள்..! உயிரோடு தூக்கில் தொங்கவிடப்பட்ட பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

திருவனந்தபுரம்: கீரிப்பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


இன்றைய சமூகத்தில் சில குரூரமான சம்பவங்களை ரசித்து செய்யும் சைக்கோ மனிதர்கள் நம்மிடையே அப்பாவி போல வாழ்வது வழக்கமாகியுள்ளது. இதுபோலவே, கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஒருவித சைக்கோ கொடூரம் அரங்கேறி வருகிறது. ஆம், திருவனந்தபுரம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு, கர்ப்பமாக இருந்த பூனையை மர்ம நபர்கள் சிலர் தூக்கிலிட்டு கொலை செய்தனர்.

அதற்கடுத்த நாளில் ஆலப்புழா பகுதியில் நாய் ஒன்றை இதேபோல தூக்கிலிட்டு சிலர் கொலை செய்தனர். இந்த வரிசையில் தற்போது கும்பாடாஜே தீவுப் பகுதியில் உள்ள பாக்குமரத் தோட்டத்தில் 2 கீரிப்பிள்ளைகளை சிலர் தூக்கிலிட்டு கொன்றுள்ளனர். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

கடந்த ஒரு வாரமாக இப்படி தொடரும் கொலைச் சம்பவங்களால் கேரள மக்கள் பீதியில் உள்ளனர். வனவிலங்குகளை துன்புறுத்தி கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.