கல்லூரி மாணவியை துரத்தி துரத்தி செக்ஸ் டார்ச்சர்! போலீஸ் மீது பகீர் புகார்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருகிறது. சில காமக்கொடூரர்களால் அவர்களால் எளிதில் நடமாட இயலவில்லை.


 காவல்துறையினர் எவ்வளவோ சிரமப்பட்டு பெண்களை பாதுகாக்கின்றனர். ஆனால் காவலர்களில் சிலர் காமக்கொடூரர்களாக மாறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுரண்டை என்னும் இடம் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு மூன்று காவலர்கள் பாலியல் தொந்தரவு செய்து வந்த அவலம் வெளியாகியுள்ளது.

அந்த பெண் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். அந்த பெண்ணுக்கு சுரண்டை காவல் நிலையத்தின் காவலர், கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு, சுரண்டை காவல் நிலைய காவலர் முருகேசன் என்பவர், கடந்த ஒரு வருடமாக செல்போன் மூலமாகவும், நேரிலும் பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். உடனே காவலர் முருகேசனும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு காவலர் கண்ணன் ஆகிய இருவரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர்.

இதன் பிறகு இரண்டு காவலர்களும், மற்றொரு பெண் காவலரான சரஸ்வதியும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை அறிந்த எஸ்.பி அருண் சக்திகுமார் அவர்கள் மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.