லாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி

சமீபத்தில் உதயநிதி பேசிய பேச்சு பல மட்டங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அவர், 'இன்னும் நாம் ஆட்சிக்கு வரவில்லை... பார்த்துக் கொள்கிறோம். ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ். பேரெல்லாம் நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கிறது. எங்களுக்கு தெரியாத காவல் துறையா... நாங்க பார்க்காத காவல் துறையா...' என, மிரட்டல் தொனியில் பேசியிருந்தார்.


அதற்கு காவல் துறை அதிகாரி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா…? அடுத்து தி.மு.க., தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நினைப்பில் உதயநிதி இருக்கிறார். எனவே, போலீஸ் அதிகாரிகள் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும் என, கருதுகிறார். ஓய்வு பெறும் வரை பணியில் இருப்பவர்கள், போலீசார். அரசியல்வாதிகளை போல, மாறக் கூடியவர்கள் அல்ல. ஒரு போலீஸ்காரர், எப்போதுமே இன்னொரு போலீஸ்காரரை விட்டுக் கொடுக்க மாட்டார்.

போலீசை, அதுவும் உயர் போலீஸ் அதிகாரியை, கிள்ளுக்கீரையாக எண்ணி மிரட்டல் தொனியில் பேசினால், அதை மற்ற போலீசார் எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வர்? தன்னையேஅவமானப்படுத்தும் வகையில் பேசியதாகத் தான், ஒவ்வொரு போலீஸ்காரரும் எடுத்துக் கொள்வார்.

ஒரு வேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஏதாவது பிரச்னையில் நீங்கள் மாட்டினால் தெரியும்; போலீஸ்காரர்கள் 'லாடம்' கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.