நடுரோட்டில் வெட்டி கூறு போடப்பட்டு போலீஸ்காரர் மகன்! காதலை சேர்த்து வைத்தவருக்கு நேர்ந்த பயங்கரம்! மதுரை பரபரப்பு!

மதுரை: காதல் திருமணத்திற்கு உதவி செய்த போலீஸ்காரர் மகனை நடுரோட்டில் மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரரான இவர், சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, வாரிசு அடிப்படையில் இவரது மனைவி வெங்கடேஸ்வரிக்கு, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளர்க் வேலை தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களது மகன் கோபால்சாமியை, வெள்ளிக்கிழமை இரவு தல்லாகுளம் பகுதியில், 8 பேர் சேர்ந்து நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர். இதுபற்றி தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.  

முதல்கட்ட விசாரணையில், கோபால்சாமி, அவரது நண்பர் ஒருவருக்கு, சில நாள் முன்பாக, காதல் திருமணம் செய்து வைத்ததாகவும், இதுதவிர அப்பகுதியில் நடைபெறும் வாகன திருட்டு சம்பவங்கள் பற்றி போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்ததாகவும் தெரியவந்தது. இதன்பேரில் ஏதேனும் முன்விரோதம் கொண்டவர்கள், கோபால்சாமியை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.