காக்கி சீருடையில் மனைவியிடம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரி! வைரல் ஆகும் வீடியோ!

ஜெய்ப்பூர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது திருமணத்திற்கு ஆல்பம் வீடியோ உருவாக்கிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தானின் சட்டிகர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தன்பாட். இவருக்கு திருமணம்  செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது திருமணத்தை முன்னிட்டு, மணப்பெண்ணுடன் இணைந்து, தன்பாட் ஒரு ஆல்பம் ஷூட்டிங் செய்துள்ளார்.

அந்த ஆல்பத்தில், 'போலீசாக இருக்கும் தன்பாட்டிடம், மணப்பெண் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி வந்து சிக்கிக் கொள்கிறார். அதற்கு தண்டனையாக தோப்புக் கரணம் போட சொல்கிறார்.

ஆனால், இதனை தன்பாட் கவனிக்காமல் லஞ்சம் வாங்குவதில் பிசியாக உள்ளார். உடனே அவரது பர்ஸை மணப்பெண் திருடிச் சென்றுவிடுகிறார். பிறகு அதனை அவரே கண்டுபிடித்தது போல தன்பாட் வசம் கொண்டு வந்து தருகிறார்.

இதில், இருவருக்கும் இடையே காதல் மலர்வதாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதில், போலீசாரை லஞ்சம் வாங்குவதைப் போல தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி, தன்பாட்டிற்கு, அவரது உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

திருமணத்திற்கு ஆல்பம் ஷூட்டிங் செய்யப் போய், திருமணம் நடைபெறும் முன்பாகவே சர்ச்சையில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, சமூக ஊடகங்களில் கண்டனம் குவிந்து வருகிறது.