மனைவி ஜெயா இருக்கும் போதே.. ஆசாவுடன் பழக்கம்..! தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்திய போலீஸ்காரருக்கு ஏற்பட்ட விபரீதம்!

சென்னையில் மனைவியை பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த காவலர் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதால் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.


சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் வெங்கடேசன் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெயா என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால் குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேசன் பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

குடும்பத் தகராறு காரணமாக வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவருடன் 2வதாக வாழ்ந்து வரும் ஆஷா என்பவர் போலிசாரிடம் தெரிவித்தார். ஆனால் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் வெங்கடேசன், ஆஷாதான் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதை அடுத்து ஆஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை பிரிந்து வாழும் வெங்கடேசனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் எனக்கும் துரோகம் செய்யும் வகையில் வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்து பெட்ரோல் எடுத்து சென்று அவர் மீது ஊற்றி தீ வைத்ததாகவும், இந்த பிரச்சனையில் இருந்து தான் தப்பித்துக் கொள்ள அவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து விடலாம் என முடிவு செய்ததாகவும் ஆஷா தெரிவித்தார்.

இதை அடுத்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.