தகாத நட்புறவு! பெண் காவல் அதிகாரி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதன் அதிர்ச்சி பின்னணி!

திருமணம் செய்து வற்புறுத்திய சக ஆண் போலீஸ் அதிகாரி, அந்தப் பெண் மறுத்ததால் கூர்மையான ஆயுதத்தால் குத்தி, பெட்ரோ உற்றிக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.


வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சவுமியாவின் கணவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருச்சூரில் போலீஸ் பயிற்சி மையத்தில் சவுமியாவும், போக்குவரத்துக் காவல் துறை அதிகாரியான அஜாஸ் என்பவரும் சந்தித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் ஃபேஸ்புக் மூலமும் நேரிலும் தங்கள் நட்பைத் தொடர்ந்து வந்தனர்.

அவர்கள்டையே பொருளாதாரக்  கொடுக்கல் வாங்கல்களும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில் தங்களது நட்பு தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கக் கூடும் என்ற சூழல் வந்தபோது சவுமியா தங்கள் நட்பைத் துண்டிக்க முற்பட்டார். தொலைபேசியில் அஜாசுடன் பேச மறுத்ததோடு வாட்ஸ்அப் எண்ணையும் பிளாக் செய்தார்.

இதனால் சவுமியாவுடன் தகராறு செய்த அஜாஸ் சவுமியா தனது கணவனையும் 3 குழ்ந்தைகளையும் விட்டுவிட்டு தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சவுமியா திட்டவட்டமாக மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அஜாஸ் சவுமியாவைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்ட அஜாஸ் பின்னர் சவுமியாவை கூர்மையான கத்தியால் குத்தியதாகவும் அவர் மீது பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்ததாகவும், தன் மீதும் நெருப்பு வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சவுமியா உயிரிழந்த நிலையில் அஜாஸ் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது வாழ்க்கையில் நடப்பது எதையும் சவுமியா தனது தாய் இந்திராவிடம் மறைக்காமல் கூறி விடுவார் என்ற நிலையில் போலீசாரின் விசாரணையில் இந்திரா நடந்தது அனைத்தையும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சவுமியாவின் மூத்த குழந்தைகள் இருவரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாம உறைந்து போயுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மனரீதியாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 3-வது குழந்தை நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்லா முடியாத வயதில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் சவுமியா அஜாசுடன் கொண்ட நட்புறவு தான் இந்த விபரீதத்திற்கு முதலில் காரணமாகியுள்ளது.

இஜாஸ் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அவருடன் மணிக்கணக்கில் பேசியதோடு கடனாகவும் பணம் வாங்கியதாக தெரிகிறது. இப்படி தகாத நட்புறவே சவுமியாவின் கொடூர முடிவிற்கு காரணமாக அமைந்துவிட்டதாக அவரது உறவினர்களே கூறுகின்றனர். அதே சமயம் சவுமியா சக அதிகாரி என்கிற ரீதியில் நட்பை தொடர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தேவைக்கு நண்பர் என்கிற முறையில் இஜாசிடம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அதனை சவுமியா திரும்ப கொடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் இந்த கொலையில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.