ஓடும் பேருந்தில் போலீஸ்காரர் மனைவியுடன் உட்கார்ந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

கோட்டயம்: அரசுப் பேருந்தில் போலீஸ்காரரின் மனைவி அருகில் அமர்ந்த குற்றத்திற்காக ஒருவர் மீது வழக்குப் பதிய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயங்குளத்தில் உள்ள செக்கன் குளக்காரா பகுதியில் இருந்து ஹரிபாட் வரை  சென்ற அரசுப் பேருந்தில் வழியில், மானுபிரசாத் என்ற இளைஞர் ஏறியுள்ளார். பேருந்தில் ஆண் வரிசை சீட்கள் அனைத்தும் நிரம்பியிருந்ததால், வேறு வழியின்றி, பெண்கள் வரிசையில் ஏற்கனவே ஒரு பெண் அமர்ந்திருந்த சீட்டில் சென்று மானுபிரசாத் உட்கார்ந்துள்ளார்.

ஆனால், அந்த பெண் உடனே கோபமடைந்து, வேறு ஒரு சீட்டிற்கு மாறிச் சென்றுவிட்டாராம். அதுதவிர, உடனே இந்த சம்பவம் பற்றி தனது கணவருக்கு அவர் அலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் கூறியிருக்கிறார். அவரது கணவர் காவல்த்துறையில் பணிப்புரிகிறார்.

இதையடுத்து ஹரிபாட் வந்து பேருந்து நின்றதும் அந்த இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்வதாகக் கூறியுள்ளனர். போலீஸ்காரரின் மனைவியிடம் சில்மிஷம் செய்ததாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக, அங்கிருந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இருந்தாலும் விடாத போலீசார் மானுபிரசாத்தை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதேசமயம், அவர் மீது புகார் அளித்த பெண் போலீஸ் நிலையம் வராமல் டபாய்த்து விட்டதாகக்கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும், மானுபிரசாத் மீது எந்த தவறும் இல்லை என்றும், இது பொய்ப்புகார் என்றும் தெரிவிக்கவே, தற்போது என்ன செய்வதென ஹரிபாட் பகுதி போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.