நெதர்லாந்தில் இருந்து அழுகிய நிலையில் இந்தியா வந்த பெண் உடல்! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

காதல் தம்பதி நெதர்லாந்தில் வசித்த நிலையில் அந்தப் பெண்ணில் உடல் அழுகிய நிலையில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மராட்டிய மாநிலம் மும்பை மலாடைச்  சேர்ந்த காதல் தம்பதியான ஷர்மிளா ஷிண்டே - அவதூத் ஷிண்டே ஆகியோர் தங்கள் குழந்தைகள்டன் நெதர்லாந்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள அவர்களின் குடியிருப்பில் ஷர்மிளாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாகக் கூறி அந்நாட்டுப் போலீசார் மலாடில் உள்ள ஷர்மிளாவின் தாய் வீட்டுக் குடும்பத்துக்கு அனுப்பிவைத்தனர் .

இது தொடர்பான புகாரின் பேரில் ஷர்மிளாவின் உடலை மலாட் போலீசார் உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது ஷர்மிளா மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால் ஷர்மிளாவின் உடலில் காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் ஷர்மிளாவின் இறுதிச் சடன்கில் அவரது மாமியார் வீட்டுக் குடும்பத்தினருடன் அவரது இரு குழந்தைகளும் அழுகையுடன் கலந்துகொண்டனர். அவதுத்தும் இந்தியா வந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் ஷர்மிளாவின் மர்ம் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.