அசுர வேகம்..! நேராக சென்று கண்டெய்னர் லாரியில் சொறுகிய ஆட்டோ! கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோரம்!

சென்னை அருகே ஆட்டோ ரேஸில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, ரேஸில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரபாகரன் ஆட்டோ மெக்கானிக் என்றும், அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் ரேஸில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.  

நேற்றைய தினம் ரேஸில் ஈடுபட்டபோது, போரூர் சுங்கச்சாவடி அருகே முன்னே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் மீது ஆட்டோ மோதியதில் இவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.  

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரேஸில் ஈடுபட்ட மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.