தி.மு.க. தலைமையில் மான் கறி சாப்பிட்டது யார்..? தீவிர விசாரணையில் காவல் துறை. .

திருப்போரூர் அருகே செங்காடு பகுதியில் நிலத்தகராறு ஏற்பட்டதும் துப்பாக்கி எடுத்து சுட்டு ஆக்ரோஷம் காட்டினார் தி.மு.க. எம்.எல்.ஏ.வான இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி. இந்த விவகாரம் இப்போது அடுத்த கட்டமாக மான்கறி வேட்டைக்குத் தாவியிருக்கிறது.


ஆம், இதயவர்மனிடம் அனுமதி இல்லாத கள்ளத்துப்பாக்கியும், ஏகப்பட்ட தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இவர் அடிக்கடி வேட்டையாடப் போவது வழக்கம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி வேட்டைக்குப் போகும்போது மானை வேட்டையாடி வருவார் என்று சொல்லப்படுகிறது.

அப்படி வேட்டையாடிய மானின் இறைச்சியை சென்னையில் தி.மு.க. தலைவரின் வீட்டுக்கும் கொடுத்துள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. மான் வேட்டை தடை செய்யப்பட்டது என்பதால் இதயவர்மனுக்கு நிச்சயம் சிக்கல் வரும் என்று தெரிகிறது. அதே நேரம், அவர் யாருக்கெல்லாம் மான் கறி சப்ளை செய்தார் என்ற பட்டியலும் எடுக்கப்படுகிறது.

சென்னையில் தி.மு.க. தலைவர் வீட்டுக்கும் சப்ளை செய்திருப்பதாக இதயவர்மனின் உதவியாளர்கள் கூறியுள்ளார்களாம். இதையடுத்து ஸ்டாலின், உதயநிதியிடமும் விசாரணை நடைபெறும் என்றே சொல்லப்படுகிறது.