சமந்தா மாமனார் பண்ணை வீட்டில் கிடந்த சடலம்! யார் என கண்டுபிடித்தது போலீஸ்!

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


ஆந்திராவில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் இவருக்கு என்று சொந்தமாக 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது. பண்ணையில் அருகில் உள்ள பல ஆட்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ணை வீட்டின் வழியாக வேலையாட்கள் சென்று கொண்டிருக்கையில் துர்நாற்றம் அதிகமாக வீசியுள்ளது. இதுகுறித்து நாகர்ஜுனாவின் வீட்டிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டன. நேரடியாக நாகர்ஜுனா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று என்னவென்று பார்க்கையில் மனித சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதன்காரணமாகவே துர்நாற்றம் வந்திருக்கிறது. 

உடனடியாக இது யாருடைய சடலம்? இவர் எங்கே இருந்து இறந்ததற்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணையில் இறந்தவர் பாப்பிரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சக்காளி குண்டு(30)  என்பவர் என்றும், இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சில ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என அவரது பெற்றோர்கள் விசாரணையில் கூறியுள்ளனர்.

இருப்பினும் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.