குழந்தைகளை அழைக்க பைக்கில் அதிவேகம்! குறுக்கே வந்த நாய்! சடன் பிரேக் போட்ட ஏட்டய்யாவிற்கு ஏற்பட்ட துயரம்!

விருதுநகர் மாவட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த காவலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டிபாளையம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணி புரிபவர் சாம்பிரேம் ஆனந்த் . சம்பவத்தன்று காவலர் ரோந்து பணிக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது முத்துராமலிங்கபுரம் பகுதி அருகே வரும்போது அவரது இருசக்கர வாகனத்திற்கு முன்னால் நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.

இதனால் நிலை தடுமாறிய அவர் வாகனத்தை ரோட்டின் ஓரமாக ஓட்டியுள்ளார். இந்நிலையில் ரோட்டின் ஓரத்தில் இருந்த பேரிகார்டு மேல் மோதி கீழே விழுந்துள்ளார். நிலையில் அவர் அணிந்திருந்த தலைக்கவசத்தின் பாதுகாப்பு பட்டை போடாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அவரது தலையில் இருந்து தலைக்கவசம் கழண்டு கீழே விழுந்தது.

இந்நிலையில் அவரது தலையில் பலமாக அடி ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்த மக்கள் உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே காவலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது காவலர் தலைக்கவசத்தின் பாதுகாப்பு பட்டை அணியாமல் இருந்ததுதான் அவர் தலையில் பலமான அடி ஏற்பட்டு உயிர் இறந்ததற்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.