சமூக வலை தளங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி அவதூறாக பேசியதாக ஒரு பெண் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தலித்துகள் குறித்து ஆபாச, அறுவெறுப்பு பேச்சு! வாட்ஸ் ஆப் வைரல் பெண்ணுக்கு கோவையில் வைக்கப்பட்ட ஆப்பு!

சமீப காலமாக பெண் ஒருவர் கேவலமான வார்த்தைகளால் ஒரு சமூகத்தை பற்றி பேசும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு மிகவும் அமைதியான பெண் போல தெரியும் அவர் பேசும்போது ஏதோ உபயோகமான கருத்தைத்தான் சொல்லப் போகிறார் என நினைத்து கேட்க ஆரம்பித்தால் கண்டேமேனிக்கு காதில் கேட்க முடியாத வார்த்தைகளை கொட்டித் தீர்க்கிறார்.
குறிப்பாக தலித் மக்களை இழிவாகவும், கீழ்த்தரமாகவும் அந்த வீடியோவில் பெண் பேசுகிறார். மேலும் இந்த வீடியோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமில்லாமல், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. தமிழக மக்களிடையே முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு பேசிய பெண் குறித்து சமூக ஆர்வலர் பெரியார் மணி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அருந்ததியர் சமூகத்தினர் பற்றி ஆபாசமாகவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்த பெண் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அவதூறாக பேசும் வீடீயோக்களை வெளியிட்டு மக்களின் அமைதியை குலைத்து வருவது நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக காவல்துறை விழிப்பாக இருந்து பல நடவடிக்கைகளை எடுத்தாலும், சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் விதத்தில் வெளிவரும் வீடியோக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள வீடியோக்களை கட்டுப்படுத்துவது கடினம் எனவும் கூறப்படுகிறது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். நல்லது நாம் செய்யும் வியாபாரத்தை விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம். ஒரு சமூகத்தை பற்றி அவதூறாக பேசுவதால் பிரச்சனைகள் பெரிதாகும். மக்களிடையே தேவையற்ற பிரிவினைனை தூண்டிவிடும். அதுமட்டுமின்றி சட்டமும் நம்மை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்.
நல்லது செய்பவர்களும் தவறு செய்பவர்களும் சாதி, மத, இன பேதமின்றி அனைத்து இடத்திலும் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகம்த தவறு செய்பவது போல் பேசுவது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.