ஒன்லி செக்ஸ்! நோ மேரேஜ்! காதலியிடம் கண்டிசன் போட்ட இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சோளிங்கர் பகுதி அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள போவதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.


சோளிங்கர் வெங்கப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் 25 இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் சில நாட்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்

நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று நவீன்குமார் அப்பெண்ணிற்கு போன் செய்து தனிமையில் வரும்படி அழைத்துள்ளார் அப்போது அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி நவீன் குமார் அப்பெண்ணை திரும்பவும் பலாத்காரம் செய்துள்ளார். இரவு முழுவதும் தனிமையில் இருந்ததால் வீட்டில் தன் மகளை காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி அப்பெண்ணிற்கு நவீன் குமார் அருகில் உள்ள ஒரு கோவிலில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

மறுநாள் காலையில் அப்பெண்ணைப் வீட்டில் விடுவதற்காக நவீன்குமார் கூட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பெண்ணின் பெற்றோர்கள் கண்ணில் பட இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இது எடுத்து அப்பெண்ணின் பெற்றோர்கள் நவீன்குமார் இடம் தன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு நவீன்குமார்  மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரேனும் சொன்னால் அப்பெண்ணின் குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் நவீன்குமார் மிரட்டி சென்றுள்ளார். இதையடுத்து அதிர்ந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவர்கள் மீது பாலியல் குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.