கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.


உத்தரப் பிரதேச மாநிலம், கேடி கேம்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (31 வயது). அவர் சாக்கடையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி அவரது தாயார் போலீசில் புகார் அளிக்கவே, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதன்பேரில், முதலில், ஹரிஷின் மைத்துனர் ஷிவம் மற்றும் மோகித் ஆகியோரை கைது செய்து ,விசாரணை நடத்தினர். 

அப்போது, ஹரிஷின் மனைவி ஷிவானி, சிப்பு என்ற நபருடன் கள்ளக்காதல் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு, ஹரிஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷிவானி தனது வீட்டுக்கே சிப்புவை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனை ஹரிஸ்  நேரில் பார்த்துவிட்டார்.

மேலும் கள்ளக் காதலன் சிப்புவை ஹரீஸ் தாக்க முயன்றுள்ளார். அப்போது மனைவி ஷிவானி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவன் ஹரிசை அவரை, அடித்துக் கொன்று, சாக்கடையில் வீசியுள்ளார். இதற்கு, ஹிமான்சூ மற்றும் லக்மிர் என்ற 2 பேர் உதவியாகச் செயல்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.